இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு, ஏற்கனவே இருக்கும் இதய நிலைகள் முதல் போதைப்பொருள் அல்லது மதுபானம் போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் நவராத்ரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த கர்பா நிகழ்ச்சியின் போது குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வு அலையை ஏற்படுத்தியுள்ளது .
உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பதின்வயதினர் முதல் நடுத்தர வயதுடையவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது . இதில் பரோடா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனும் இறந்துள்ளார் .
தற்போது குஜராத்தில் நவராத்திரி விழா முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞன் கர்பா நிகழ்ச்சியின் போது திடீரென சரிந்து விழுந்து இறந்தார், அதே போல் கபட்வாஞ்சைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கர்பா நடனம் ஆடி கொண்டிருந்தபோது இறந்தார் .
நவராத்திரியின் முதல் ஆறு நாட்களில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக 521 அழைப்புகளும், மூச்சுத் திணறலுக்காக கூடுதலாக 609 அழைப்புகளும் பதிவாகி இருந்தது . வழக்கமாக கர்பா கொண்டாட்டங்கள் நடைபெறும் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த அழைப்புகள் 108 சேவைமைய கட்டுப்பாடு அறையில் பதிவு செய்யப்பட்டன.
அவசரநிலை ஏற்பட்டுள்ள நிலையில் , நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விரைவாக ஆம்புலன்ஸ் வருவதற்கான தாழ்வாரத்தை உருவாக்குமாறு கர்பா அமைப்பாளர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியது.
மேலும் கார்பா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு CPR பயிற்சி அளிக்கவும், பங்கேற்பாளர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள் .
இந்த அதிர்ச்சி தகவல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளது. கர்பா நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களுக்கு அருகில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சமூக சுகாதார மையங்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நடனமாடும் போது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு, ஏற்கனவே இருக்கும் இதய நிலைகள் முதல் போதைப்பொருள் அல்லது மதுபானம் போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
இதய குழாய் பிரச்சனைகள் இருக்கும் நபர்கள் அதிக ஆபத்திற்கு உள்ளாகலாம் என்றும் நடனத்தின் பொது ஏற்படும் அதிகப்படியான உற்சாகம் இதயத்தை மேலும் சிறுமைப்படுத்தி , மாரடைப்பைத் தூண்டும் என்றும் இதய சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
நடனமாடும் போதும், மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போதும் , உடற்பயிற்சிக் கூடங்களில் மாரடைப்புக்கு ஆளாகும் இளைஞர்களின் சமீபத்திய போக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .