பொன்முடி வழக்கு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக சட்டப்பிரிவு நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக கல்வி அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன், கல்வி அமைச்சருக்கு தண்டனை விதித்ததுடன், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். ஆனால், தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருவதால், பொன்முடிக்கு 30 நாட்களுக்கு தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்தார். முன்னதாக, செவ்வாயன்று, டிஏ வழக்கில் பொன்முடியை குற்றஞ்சாட்டப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அமைச்சர் பொன்முடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தார்.

பொன்முடியும் அவரது மனைவியும் டிசம்பர் 21ஆம் தேதி (வியாழன்) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். ஆட்சியில் இருக்கும் சூழலில் அமைச்சர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் பதவி இழக்கும் நிலை உருவானது. கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா அமைச்சர், தங்கம் தென்னரசு, வழக்கறிஞரும், எம்.பி.களுக்குமான என்.ஆர் இளங்கோ வில்சன் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்து பேசியுள்ளார். பொன்முடி வழக்கில் அவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி மீதான விமர்சனமாக பார்க்கப்படுவதால் உச்ச நீதிமன்றத்தில் இதற்கு நிவாரணம் பெறப்பட வேண்டும் என முதல்வர் விரும்புகிறார்.

அதற்கு ஏற்ப உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை கவனமாக நடத்த வேண்டும் என திமுக வழக்கறிஞர்களை அறிவுறுத்தி உள்ளார். கோஷ்டி பூசலுக்கு இடம் கொடுக்காமல் வழக்குகளில் தனிப்பட்ட கவனம் செலுத்தி, வெற்றியை தேடி தர வேண்டும் என அவர்களிடம் முதல்வர் கூறியுள்ளார். அதையடுத்து திமுக தரப்பில் எதிர்கொள்ளப்படும். பல்வேறு வழக்குகளின் நிலை குறித்தும் கேட்டறிந்துள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளில் கையாளுவது குறித்தும் ஆலோசித்துள்ளார். பின் திமுகவினர் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக சட்ட பிரிவு நிர்வாகிகளின் செயல்பாடுகள் இன்னும் தீவிரமாகவும், திருப்தியாகவும் அமைய வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார்.