தஞ்சை மாவட்டத்தில் 50 சதவீத உறுதிமொழிகள் நிறைவு – தி. வேல்முருகன்..!

2 Min Read

தஞ்சை மாவட்டத்தில், சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

தற்போதைய தமிழ்நாடு சட்டப்பேரவை, முன்னிருந்த சென்னை மாகாணத்தின் தொடராகக் கருதப்படுகிறது. இந்திய அரசாணை 1935-இன் படி, சென்னை மாகாண சட்டவாக்க அவை, ஈரவைகளாக முறையே சட்டமேலவை மற்றும் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவைக்கு 215 உறுப்பினர்களும், சட்ட மேலவைக்கு 56 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பணிகள் பற்றியும் கள ஆய்வு தி. வேல்முருகன்

இந்திய அரசு ஆணை 1935-ன் படி இம்மன்றம் இரு அவைகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டு மன்றமாக அழைக்கப்பட்டது. கூட்டுப் பேரவையில் 375 உறுப்பினர்களை கொண்டதாக அமைந்திருந்தது. அதில் 125 உறுப்பினர்கள் மாநில ஆட்சியாளர்களால் (மறைமுகத் தேர்வு) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். இம்மன்றத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தி. வேல்முருகன்

தஞ்சை மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் அரண்மனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது சட்டப்பேரவை உறுதிமொழி குழுவின் தலைவர் தி. வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது;- தஞ்சை மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வு செய்து வருகிறது. சட்டப்பேரவையில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி. வேல்முருகன்

இது குறித்து, நிறைவேற்றப்பட்டு வருகிற பணிகள் பற்றியும் கள ஆய்வு செய்யப்படுகிறது என்றார். அதில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள தர்பார் மண்டபத்தில் சுவர் ஓவியங்களைப் பழைமை மாறாமல் பாதுகாத்திடவும், தர்பார் மண்டபத்தில் கட்டடப் பணிகளைச் சீரமைப்பு செய்யவும் ரூபாய் 6.25 கோடி மதிப்பில் மேற்கொண்டு வருகிறது. இந்த பணி 35 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இந்த பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்ததாக கூறினார்.

தி. வேல்முருகன்

இதுபோல இந்த மாவட்டத்தில் உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம், அலுவலர் குடியிருப்பு கட்டடம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுகிற பணிகள் தொடர்பான இடங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த மாவட்டத்தில் 450-க்கும அதிகமான உறுதிமொழிகளில் 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் முழுமையான விவரங்கள் ஆய்வுக் கூட்டத்தில் தெரியவரும் என்றார் வேல்முருகன்.

Share This Article
Leave a review