ஜாபர் சாதிக்கின் உயிருக்கு ஆபத்து-சி.வி சண்முகம்

2 Min Read
கண்டன ஆர்பாட்டம்

போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் உயிருக்கு ஆபத்து உயிருடன் அவரை கைது செய்ய வேண்டும். விழுப்புரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாடு பஞ்சாப் மாநிலமாக மாறி வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவது போல, தமிழகம் இப்போது கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கின்ற அளவிற்கு வளர்ந்து விட்டது தமிழ்நாடு. ஆளும் திமுகவை சேர்ந்தவர்கள் போதை பொருள் கடத்தல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். போதை ஊசி, மாத்திரை என தமிழ்நாடு தலைவிரித்தாடுகிறது. சுகாதாரத்துறை வேடிக்கை பார்த்து வருகின்றது.அதன் அமைச்சர் என்ன செய்கிறார்.என கேள்வி எழுப்பினார்.

ஜாபர் சாதிக்

இது போன்ற செயல்களின் மீது நடவடிக்கை எடுக்க சொன்ன அதிமுகவினர் மீது வழக்கு போடுகிறது திமுக அரசு. திமுகவைச் சார்ந்த ஜாபர் சாதிக் உணவுப் பொருட்களில் 3500 கிலோ போதை பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்டு வருகிறார். அதன் மதிப்பு 2000 கோடி ஆகும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மாநில அரசு கண்டுபிடிக்கவில்லை. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிற்கு மூன்று ஆண்டுகளாக கடத்துவதாக அமெரிக்க உளவு நிறுவனம் கண்டுபிடித்து இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன செய்கிறது? என்று தெரியவில்லை திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு நடத்தும் கொரியர் நிறுவனத்தின் மூலமாகவே கடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதை செய்தியாக எடுக்க சென்ற நிருபர்களை அடித்திருப்பது எந்த வகையில் நியாயம்.

சிவி சண்முகம்

சாதிக் பாஷாவின் நிலைமை என்ன ஆனது. அதுபோன்று ஜாபர் சாதிக் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரை உயிருடன் கைது செய்ய வேண்டும். ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை இப்போது சந்தி சிரிக்கிறது. தமிழக காவல்துறையை மத்திய புலனாய்வு த்துறை நம்பக்கூடாது இது போன்ற செயல்களை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்று பேசினார்.கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள்,கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review