தமிழ்நாட்டில் தொடர்ந்து இளைஞர்கள் மொபெட் வண்டியில் சாகசம் செய்வது குறைந்த பாடில்லை.திருச்சி,சென்னை,ஈரோடு என தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.இந்த நிலையில் கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மொபட் பந்தைய வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று, சாகசத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக அண்மையில் பிரபல யூட்யூபர் டி டி எப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இருந்தும் கூட யாரும் போலீசார் சொல்லும் கட்டளைகளை மதிப்பதில்லை.ம்பெட் வாகன சாகசம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில் கரூரைச் சேர்ந்த பைக் பாண்டியன் என்ற இளைஞர் விழா காலங்களில் பைக் ஓட்டி சாகசம் செய்வது வழக்கம்.அதே போன்று பந்தயத்துக்கு பயன்படுத்தப்படும் மொபட் இருசக்கர வாகனத்தில் கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று, சாகசம் செய்து அதை செல்போனில் படம்பிடித்து ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இவர் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் மொபட் ரேஸ் நடைபெறும் இடங்களில் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.தொடர்ந்து கரூர் பகுதியில் வாகன சாகசம் செய்து வருபவர் இந்த பைக் பாண்டியன் பல முறை போலீசார் இவரை கண்டித்துள்ளனர் இருந்தும் இவர் பைக் சாகசம் செய்வதை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் இயக்கி சாகசத்தில் ஈடுபட்ட அந்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதே போன்று வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஆனால் இது தெரிந்தும் இது போன்ற சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இது போன்ற நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.