திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் அருண்குமார்(30). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். இன்று காலை அருண்குமார் வாழைக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார் ,
அப்போது அங்கு மின் கம்பத்திலிருந்த அறுந்து கீழே விழுந்து கடந்துள்ளது கம்பியை அறியாமல் மின் கம்பியில் மீது காலை வைத்துள்ளார்,
மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்ததின் பேரில் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை கைப்பற்றி
பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சுமார் 50 க்கு மேற்பட்டோர் அருண்குமார் உடலை திருச்சி-கரூர் சாலையில்
வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இறப்புக்கு
நியாயம் வேண்டும் மின்சாரத்துறை அதிகாரிகள் இதுவரையிலும் சம்பவ இடத்தை வந்து பார்ப்பதற்கு வரவில்லை என கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.