சமூக வளைதளங்களில் தற்போது ஆபாச படக்காட்சிகள் அதிகம் இடம்பெற்று வருவதை அதிகம் காண முடிகிறது.பெரும்பாலும் இன்ஸ்டாகிராம் வளைதளத்தில் பெண்களை ஆபாச வார்த்தைகளையும், உடல் உறுப்புகளை மிகவும் கேவலமான வார்த்தையினால் பாடலாக பாடி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரட்டை அர்த்தத்திலும் பெண்களை தரை குறைவாகவும் ஆபாச செய்கையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு உள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது இதுபோன்ற நபர்கள் மீது சைபர்கிரைம் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற கோமாளியாக வலம் வரும் இளைஞர் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராமில் வாங்கள் புள்ள என்ற அவனது பெயரில் ஓர் ஐடியை உருவாக்கி அதில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும் இரட்டை அர்த்தத்திலும் பாடல்களைப் பாடியும் , பெண்களின் உடல் உறுப்புகளை பற்றி மிகவும் ஆபாசமாக பாடி அதனை வீடியோவாக. பதிவிட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
மேலும் பெண்கள் குறித்து ஆபாச சைகைகள் செய்து ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி பாடல் பாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள தேனாம்பேட்டை விக்கி என்ற இளைஞர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக வலைத்தளங்களில் இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இவருடைய அனைத்து வீடியோக்களுமே மிகவும் ஆபாச வார்த்தைகளும், ரவுடி பாடல்களை பாடியும், என்னை யாரும் ஒன்னும் செய்யவே முடியாது என ஆணவத்தோடு கூடிய வார்த்தைகளை கூறி பாடலாக பாடி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கும் தேனாம்பேட்டை கோமாளி விக்கி என்பவரை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல் இவருடை சமூக பக்கங்களை காவல் துறை முடக்க வேண்டும் மேலும் இவரை கைது செய்து இது போன்ற ஆபாச பக்கங்களுக்கு நிரந்தர தடை விதிப்பதுடன் மாணவர்கள்,பெண்கள் ஆகியோரை அவதூராக பேசுவதற்கு தடைவிதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?