சங்கராபுரம் அருகே 22 வயது வாலிபர் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கல்குவாரியில் வீசியதால் பரபரப்பு சங்கராபுரம் காவல்துறை சம்பவ இடத்தில் விசாரணை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மணலூர் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரியில் 22 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சாக்கில் கட்டி மிதப்பதாக வட பொண்பரிப்பி காவல்துறையினருக்கு மணலூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய பிரியா என்ற பெண் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு வந்த விரைந்து சென்ற வட பொன்பரப்பி காவல்துறையினர் அந்த கல்குவாரி ஆய்வு செய்தபோது சணல் சாக்கில் கட்டப்பட்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் இருந்துள்ளது. அவர் மஞ்சள் நிற டீ ஷிர்ட்டும் , கருப்பு நிற டிரௌசரும் அணிந்த நிலையில் இருந்துள்ளார் .
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து தொடர்ந்து .

விசாரணை செய்ததில் அவர் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை எனத் தெரிய வந்தது. மேலும் தங்கதுரை ஏன் கொலை செய்யப்பட்டார் அவர் ஏன் சாக்கு முட்டையில் அடைத்து கல்குவாரியில் வீசப்பட வேண்டும், இந்த சம்பவம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த விஜய பிரியா என்ற பெண் ஏன் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்க வேண்டும் எனவும் இவர்களுக்கு இறந்தவருக்கும் என்ன உறவுமுறை என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.