புனித வெள்ளி திருநாள், உலகின் பல நாடுகளிலும் பல விதமாக . புனித வெள்ளி எப்போது முதல் கொண்டாடப்பட்டுவருகின்றது என்ற வரலாறு யாருக்கும் சரியாக தெரியவில்லை. அதே சமயம் 4 ஆம் நூற்றாண்டில் இருந்து புனித வெள்ளி புனித நாளாக கொண்டாடப்படுகின்றது என கூறப்படுகிறது.
இயேசு சிலுவையில் மரித்தபின்பு, அவரை கல்வாரி மலையிலுள்ள ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு அங்கு யூத அரசின் காவலாலிகள் காவலுக்கு வைக்கப்பட்டுயிருந்தனர்.

அவர் (இயேசு) மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது (அப்போஸ்தலர் 2:24) என்ற வேத வாக்கியம் நிறைவேறிற்று.
எந்த அரசாங்க சட்டங்களும், அரசாங்க முத்திரையும் அவரை கல்லறையில் அடக்கி வைக்க முடியவில்லை. இயேசு தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்.
இயேசு நமக்காக சிலுவையில் மரித்து, பாதாளத்தையும், மரணத்தையும், பிசாசை ஜெயித்து, மூன்றாம் நாள் உயிரோடே எழுந்தார்.
கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கிய பண்டிகையாக பார்க்கப்படுகிற ஒன்று, இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை.
கிறிஸ்தவத்தின் முதுகெலும்பும், அடிப்படை சத்தியமும், இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுததில் தான் இருக்கிறது, இன்றைக்கும் இயேசு ஜீவிக்கின்றார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவம் இல்லை, கிறிஸ்தவனும் இல்லை, கிறிஸ்துவ வாழ்க்கையும் இல்லை.
இயேசு கிறிஸ்து நமக்காக பூமிக்கு வந்தது சரித்திரம், மரித்து உயிர்தெழுந்ததும் சரித்திரமே. உலக வரலாற்றில் இயேசு உயிர்தெழுந்ததை உண்மை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்தெழுந்த பின்பு 40 நாள் அப்போஸ்தலருக்கும் மற்றும் தன்னுடன் கூட இருந்தவர்களுக்கு அவர் தரிசனமானார்.

ஒரு ஜீவனுள்ள மனிதனை கொலை செய்யலாம், ஆனால் ஜீவனையே கொலை செய்ய முடியுமா? முடியாது ஏன்னெனில், லாசரு மரித்து அவன் கல்லறையின் அருகே வந்தபோது, இயேசு இந்த வேத வசனத்தை கூறினார் (யோவான் 11:25) இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், என்றார்.
லாசரு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்டுயிருந்தது “லாசருவே வெளியே வா” என்று சொல்லி அவனை உயிரோடே எழுப்பினார். உயிர்த்தெழுதல் ஒரு சம்பவம் மட்டும் அல்ல, உயிர்த்தெழுதல் என்பது ஒரு நபர், அவருடைய பெயர் “இயேசு கிறிஸ்து”. “நானே உயிர்தெழுதல்” என்று அவரை குறித்து சாட்சி கூறியிருக்கிறார்.
ஓய்வுநாள் அன்று அதிகாலையில் மதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், மற்றும் சில ஸ்திரீகளும், இயேசுவுக்கு சுகந்த வர்கம் வைப்பதற்காக கல்லறையை பார்க்க வந்தார்கள்.
அங்கே அவர்கள் இயேசுவுடைய கல்லறையில் கல் புரட்டப்பட்டு, அதன் மேல் தேவ தூதன் உட்காந்திருப்பதை கண்டார்கள்.
மரியாள் மிகவும் பயந்து, இயேசுவின் சரீரத்தை கல்லறையில் இல்லை என்று கண்டபோது, அந்த தூதன், அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் என்றும்,
தூதன் கூறியதை கண்டு, அவர்கள் மிகவும் பயத்தோடும், மகிழ்ச்சியோடும், புறப்பட்டு சீஷர்களுக்கு அறிவிக்க போனார்கள்.

நம் வாழ்விலும் கூட பலவிதமான தடை கற்கள் நம்மை முன்னேறிச்செல்ல விடாமல் இருப்பதை பார்க்கலாம்,
அவருக்குள் இருந்த அந்த ஜீவன் எப்படி கல்லறையின் வாசலில் கல் புரட்டப்பட்டு இருந்ததோ, நாம் அந்த ஜீவனுள்ள தேவனை விசுவாசித்தால் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற தடை கற்கள் புரட்டப்படும்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இல்லை என்றால், மனிதகுலத்திற்கு இரட்சிப்பு இல்லை. அவர் உயிர்த்தெழுந்தபடியால், நம் எல்லோருக்கும் இரட்சிப்பு உண்டு. (ரோமர் 10:9,10) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு,
தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும் என்ற வேத வாக்கியம் நிறைவேறும்.
எனவே, இருதயத்தில் விசுவாசித்து, வாயினாலே அறிக்கை பண்ணினால் போதும் எந்த மனுஷனும் இரட்சிக்கப்படுவான்.