ஏற்காடு-உடல்நிலை சரியில்லாத ஒருவரை தூளி கட்டி தூக்கி வந்த கிராம மக்கள். வைராலாகும் வீடியோ.

2 Min Read
தூளி கட்டி பயணம்

சுதந்திரம் பெற்று பொன்விழா கொண்டாடி வரும் இந்த காலத்திலும் சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் இருக்கத்தான் செய்கிறது.இந்த கிராமங்களை அரசு கண்டு கொள்ளவில்லையா?இல்லை அரசியல்வாதிகள் இந்த கிராமங்களை அடையாளப்படுத்தவில்லையா!

- Advertisement -
Ad imageAd image

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 8கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடிகாடு கிராமம்.இது ஒரு மலை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்துவரும் அண்ணாமலை என்பவருக்கு முதுமை காரணமாக நோய்வாய் பட்டதால் அவரை மருத்துமணைக்கு கொண்டு செல்ல ஊர் மக்கள் தூளி கட்டி எடுத்து வந்தனர். இதை வீடியோவாக எடுத்து எங்கள் கிராமத்தின் அவல நிலை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இப்போது மட்டுமல்ல எப்போதும் இந்த கிராமத்தின் நிலை இது தான் என்கின்றனர் அந்த கிராம மக்கள்.

அவலம்

அந்த கிராமத்தில் வசித்துவரும் குமார் என்பவரிடம் இந்த வீடியோ பதிவை பற்றி கேட்டபோது

பல வருடமாக இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்டுவதாகவும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிராமத்திற்க்கு செல்லும் சாலையின் குறுக்கே தனியார் எஸ்டேட் உரிமையாளர் அந்த இடம் எனக்கு சொந்தமானது என்று வேலி அமைத்து தடுத்து விட்டதாகவும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஊர் மக்கள் அனைவரது வீட்டின் மேலும் கருப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க வயமாட்டோம் என்று கூறினோம். அப்போது அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து தேர்தல் முடிந்தவுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்களித்தார். அதன்பின்பு இதுவரை யாரும் எங்களை பற்றி நினைப்பதில்லை. இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு வட்டாச்சியர், சேலம் மாவட்டம் ஆச்சித்தலைவரிடம் முறையிட்டும் பலனில்லை என்று வேதனை தெரிவித்தார்.

அவலம்

எவ்வளவோ கிராமங்களுக்கு என்னென்னவோ திட்டங்களை அறிவித்து வரும் தமிழக முதல்வருக்கு இந்த கிராமம் மட்டும் எப்படி தெரியாமல் போனது.இபபடி ஒரு கிராமம் இருப்பது எப்படி ஆட்சித்தலைவருக்கு தெரியாமல் போனது என்பது வியப்பாக இருப்பதாக ஆச்சரியப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.இனியாவது இது போன்ற கிராமங்கள் கண்டறியப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பு.நடவடிக்கை எடுக்கட்டும் அரசு.

Share This Article
Leave a review