பெண் காவலரை அறைந்த ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய்.எஸ் ஷர்மிளா.

1 Min Read
ஒய்.எஸ் ஷர்மிளா

தெலுங்கனாவில் அரசுப் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி வரும் டிஎஸ்.பி.எஸ்சி தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்குழுவிடம் சில ஆவணங்களை காட்ட ஒய்.எஸ்.ஆர் தெலுங்கா கட்சியின் தலைவரும் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ் ஷர்மிளா சென்றார்.

- Advertisement -
Ad imageAd image

ஆனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் , சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு செல்ல தனது காரில் எற முற்பட்ட ஷர்மிளாவை , அங்கு முன்கூட்டியே பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்ட பெண் காவலர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள் . இதனால் ஆத்திரம் அடைந்த ஷர்மிளா , பெண் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார் , மேலும் வாக்குவாதம் முற்றவே , அங்கு இருக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அறைகிற போல் அந்த காணொளி உள்ளது .

இதையடுத்து அங்கு கூடியிருந்த பெண் போலீஸ் அதிகாரிகள்  அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் . அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் , காவல் நிலையத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஆந்திரா மாநில காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a review