இரண்டாவது கட்டத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான அமர்நாத் யாத்திரைக்கான பணிகள் தீவிரம்

1 Min Read
யாத்திரை

இரண்டாவது கட்டத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் யாத்திரிகர்களுக்குத் தூய்மையான மற்றும் கழிவற்ற சூழலை உறுதி செய்வதற்காக ஏராளமான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூய்மையைக் கடைப்பிடிக்கவும், பொறுப்பான முறையில் கழிவுகளை அகற்றுவதை ஊக்குவிக்கவும், கழிவு மேலாண்மை முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற முயற்சிகள் அமர்நாத் யாத்திரையின் தூய்மை நிலைகளை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தி, பக்தர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்திற்கு வழிவகை செய்துள்ளன.

- Advertisement -
Ad imageAd image

2022 அமர்நாத் யாத்திரையின் போது, 127 கழிவறை இருக்கைகள், 40 குளியலறை வசதிகள் உள்ளிட்டவை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் நிர்மாணிக்கப்பட்டன. இது மட்டுமல்லாமல் யாத்திரைக்காக அமைக்கப்பட்ட 780 கழிவறைகளின் பராமரிப்புப் பணிகளையும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டன. 100% கழிவுகளை சேகரிப்பதற்காக கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தூய்மையை கடைப்பிடிப்பதற்காக தங்கும் விடுதிகள், சுற்றியுள்ள சாலைகள் மற்றும் இதர பகுதிகளில் 231 துப்புரவு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

செயல்திறன்மிக்க கழிவு அகற்றும் நடைமுறையை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஜம்மு காஷ்மீரின் 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மே 12, 2023 அன்று 9 திடக்கழிவு மேலாண்மை வசதிகள் தொடங்கப்பட்டன. 2023-ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  தூய்மையான அமர்நாத் யாத்திரையின் மூலம் இரண்டாவது கட்டத் தூய்மை இந்தியா இயக்கம், ஒட்டுமொத்த யாத்திரிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தி இருப்பது மட்டுமல்லாமல், பக்தர்களிடையே தூய்மை மற்றும் துப்புரவின் மாண்புகளையும் வலியுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a review