கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன்பெற வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு.கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

தகுதி வாய்ந்த மகளிருக்கு வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயனாளிகளுக்கு சென்னை மாநகராட்சி முன்னணி வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறுயதாவது: அனைத்து வார்டுகளில் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும். முதல் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை 98 வார்டுகளில் முகாம்கள் நடத்தப்படும். மீதமுள்ள 198 வார்டுகளில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 16 வரை 2வது கட்ட முகாம்கள் நடத்தப்படும். வங்கிக் கணக்கு இல்லாத பயனர்களுக்கு முகாம்களில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க வங்கிகள் ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பயனாளிகள் முகாம்களுக்கு வரும் போது ஆதார் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்” என்று டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறினார்.