நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விஜய்யுடன் திரிஷா நடித்து சம்பவத்தில் திரைக்கு வந்த லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருந்தார்.
லீயோ படத்தில் தனக்கு திரிஷாவுடன் நடிக்கும் காட்சிகள் இல்லாதது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது. இதற்கு கண்டனம் தெரிவித்த திரிஷா என்னைப் பற்றி மன்சூர் அலிகான் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும், பாலியல்ரீதியாகவும், அவமரியாதையாகவும் பேசி உள்ள வீடியோ கவனத்துக்கு வந்தது. இனிமேல் மன்சூர் அலிகானுடன் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். இது பெரும் பரபரப்பானது. இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி பேசும் வீடியோவை பார்த்து அதிர்ஷ்ட அடைந்தோம்.

சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகள் பற்றி இப்படி மோசமான கருத்துக்களை தெரிவித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகர்களுடன் தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதுணையாக நிற்கும் ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச மன்சூர் அலிகான் கற்றுக் கொள்ள வேண்டும். தான் உதிர்க்கும் வார்த்தைகள் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற உணர்வின்றி அவர் பேசியது தவறு. எனவே உண்மை மனதுடன் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த கீழ்செயல் காரணமாக தன் தவறை உணர்ந்து, மனம் அறிந்து உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்க கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது.
இதனை உதாரணமாக நேற்று வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொது வெளியில் கருத்துக்களை பகிரும் போது கவனமாக பகிர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே போல் நடிகை குஷ்பூவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் தான் மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கள் குறித்து மூத்த உறுப்பினர்களிடம் தெரிவித்து இருக்கிறேன். அவர் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற இழிவான சிந்தனையோடு இருப்பவர்களை விடக்கூடாது. திரிஷாவுக்கு ஆதரவாக இருக்கிறேன். பெண்கள் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்காக போராடி வரும் நிலையில், இது போன்றவர்கள் பெண்களைப் பற்றி இழிவாக பேசி வருகிறார்கள் என்று சாடி உள்ளார்.
நடிகை மாளவிகா மோகனனும் மன்சூர் அலி கானை கண்டித்து உள்ளார். இதற்கிடையே திரிஷா புகாருக்கு பதில் அளித்து, மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு வந்த செய்திகளை அனுப்பிச்சாங்க. என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல நான் வர்ற தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பாக போட்டியிடறேன்னு சொன்ன வேளையில் வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிட்டுருக்கா உண்மையிலேயே அந்த பொண்ண உயர்வாகத்தான் சொல்லி இருப்பேன்.

அனுமாரு சிரஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்திலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகன் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்லை என்ற ஆதங்கத்தை காமெடியா சொல்லி இருப்பேன். அதை கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நினைச்ச நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சரவனா. திரிஷாட்ட தப்பா வீடியோ காட்டிருக்காங்க. என் கூட நடிச்சவங்க எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி மந்திரின்னு ஆயிட்டாங்க. பல கதாநாயகிகள் பெரிய தொழில் அதிபர்கள மணந்து செட்டில் ஆயிட்டாங்க.
மேலும் லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில்ரூபா உங்களோட பெரிய ரசிகன் என்று சொன்னேன். 360 படங்களில் நடித்துவிட்டு நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறவன். திரிஷாட்டா தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சிருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனையோ பிரச்சனை இருக்கு பொழப்ப பாருங்க.. என்று கூறியுள்ளார். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் டி.ஜி.பி க்கு பரிந்துரை செய்யப்பட்டது.