உளுந்தூர்பேட்டை அருகே மருதீஸ்வரர் கோவிலில் சிறுதொண்ட நாயனாரின் அமுதப் படையல் நிகழ்ச்சியில் 1000 ற்கும் மேற்பட்டோர் அன்னதானம் அருந்தி குழந்தை வரம் வேண்டி மண்டியிட்டு மடிச்சோறு வாங்கி பெண்கள் நூதன வழிபாடு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை சமேத மருதீஸ்வரர் ஆலயத்தில் சிறுதொண்டு நாயனாரின் அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிவபெருமான் மாறுவேடமிட்ட கைலாய வாத்தியங்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு சிறுதொண்டர் நாயனாரை குழந்தை வரம் வேண்டி சிவபெருமானிடம் வரம் கேட்டபிறகு குழந்தை பிறந்தது அதனை சோதித்து சென்று சிவபெருமானின் புராண வரலாரை பாடல்கள் மூலம் எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்ட சிவபெருமானுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனை யடுத்து ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
பின்னர் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மண்டியிட்டு மடிச்சோறு வாங்கி வழிபாடு செய்தனர். இதில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.