திருவள்ளூர் : நூறுநாள் வேலை கேட்டு பெண்கள் கை குழந்தைகளுடன் போராட்டம் .!

1 Min Read
  • திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் கம்மவார்பாளையம் ஊராட்சியில் நூறுநாள் வேலை கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட பெண்கள் கை குழந்தைகளுடன் ஊராட்சி ஒன்றிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வதாகவும் மீதமுள்ள நாட்கள் வேலை நடைபெற வில்லை குற்றம் சாட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

நூறு நாட்கள் வேலைக்கான இடத்தினை தேர்வு செய்து பொதுமக்கள் காட்டிய பிறகும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வேலை நடத்தவில்லை என குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மவார் பாளையம் ஊராட்சியில் அடங்கிய பெரியமனோபுரம்,எல்.எஸ்.பூதூர்,கொளத்தூர்,கம்மவார்பாளையம் இருளர் காலனி,கண்டிகை ஆகிய கிராமங்களில் சுமார் 3000, க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

விவசாயம் மற்றும் கூலி வேலைகளை பிரதான வேலைகளாக கொண்டு பணி செய்யும் இவர்களுக்கு மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலையானது கடந்த 2023-24ம் ஆண்டு கால வாக்கில் ஒரு வருடத்தில் மொத்தம் ஐந்து நாட்களே வேலை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஐந்து நாட்களுக்கும் கூலி வழங்கப்படவில்லை எனக் கூறியும் இந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

தாங்கள் கொண்டு வந்த மகாத்மா காந்தி வேலை உறுதி திட்ட அட்டையை அலுவலகத்தில் ஒப்படைக்கும் விதத்தில் அனைவரும் அந்த அடையாள அட்டைகளை அதிகாரிகளிடம் வழங்கினர். குழந்தைகளோடு வந்த சில பெண்கள் இந்த பிரச்சனைக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்..

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/high-court-orders-probe-into-star-health-insurance-embezzlement/

சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Share This Article
Leave a review