விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மயில் கிளியனூர் திண்டிவனம் போன்ற பகுதிகளில் போலீசார் தொடர்ந்து சாராய வியாபாரிகளை கைது செய்து வந்தனர் இந்த நிலையில்
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழ் சித்தாம்பூர் கிராமம். இந்த கிராமத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிளியனூர் போலீசார் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து திண்டிவனம் தாலுக்கா அரியன்குப்பம் கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மலர் என்பவர் சாராயம் விற்று வந்தது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் , அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி தடுப்பு காவல் சட்டத்தில் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் மலர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.