பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பெண் உயிரிழப்பு, 38 பேர் படுகாயம்: அண்ணாமலை வேதனை

1 Min Read
அண்ணாமலை

விருதுநகர் அருகே, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதும், 38 பேர் படுகாயம் அடைந்துள்ள செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்ம் உயிரிழந்த சகோதரி குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “விருதுநகர் அருகே, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதும், 38 பேர் படுகாயம் அடைந்துள்ள செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்த சகோதரி குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பேருந்து ஓட்டுநர், தூக்கக் கலக்கத்தில் கட்டுப்பாட்டினை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களில், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதும், அதன் காரணமாக, ஊழியர்கள் அதிக பணிச் சுமைக்கு ஆளாவதும் தொடர்கதை ஆகியிருக்கிறது.

அண்ணாமலை

மேலும், முறையான பராமரிப்பின்றி, அரசுப் பேருந்துகள் தொடர்ந்து விபத்தில் சிக்குவதும், இதனால் பயணிகள் அல்லலுக்குள்ளாவதும் தினசரி செய்திகளாகியிருக்கின்றன. காலி பணியிடங்களை நிரப்புவோம், புதிய பேருந்துகளை வாங்குவோம் என்று, ஆண்டுதோறும் வெற்று அறிவிப்புகளோடு நிறுத்திக் கொள்கிறது திமுக அரசு. உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களில், காலி பணியிடங்களை நிரப்பவும், பழுதடைந்த பேருந்துகளைப் பயன்படுத்தி, பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்தி விட்டு, புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் திமுக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Share This Article
Leave a review