வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த பெண் மீண்டும் இன்ஸ்பெக்டர் கைது

2 Min Read
கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் வசந்தி

உரிய ஆவனங்கள் இல்லை என கூறி ரூ 10 லட்சம் பணத்தை ஆய்வாளர் வசந்தி பறித்துள்ளார்.உரிய ஆவங்களை காண்பித்தும் பணத்தை தரவில்லை ஆய்வாளர் வசந்தி. இது தொடர்பாக அர்சத் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக முன்னாள் பெண் காவல் ஆய்வாளரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து காவல்துறையினர் கைது சென்றனர்.

சம்பவ பின்னணி :

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பர் பை தயாரிக்கும் நிறுவனம் நடத்திவருகிறார்.இதற்காக இவர் பொருட்கள் வாங்க கடந்த 2021 ஆம் ஆண்டு,  ஜீலை 5 ம் தேதி மதுரை சென்றுள்ளார்.

அப்போது நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்த பெண் ஆய்வாளர் வசந்தி என்பவர் 5 பேருடன் சேர்ந்து அர்சத் சென்ற வாகனத்தை வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.அப்போது அவர்களிடன் ரூ 10 லட்சம் இருந்துள்ளது உரிய ஆவனங்கள் இல்லை என் கூறி  ரூ 10 லட்சம் பணத்தை ஆய்வாளர் வசந்தி பறித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் வசந்தி

உரிய ஆவங்களை காண்பித்தும் பணத்தை தரவில்லை ஆய்வாளர் வசந்தி. இது தொடர்பாக அர்சத் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு  காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரனையில் ஆய்வாளரின் உறவினர் பால்பாண்டி என்ற ஒருவர் மதுரை திருமங்களத்தில் இருந்து அசரத்தை வியாபாரத்திற்கு அழைத்துள்ளார்.அந்த தகவலை ஆய்வாளருக்கு தெரிவித்து பணத்தை பறித்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக பால்பாண்டி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பெண் ஆய்வாளர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்தனர். கைதுக்கு பயந்து ஆய்வாளர் தலைமறைவு ஆனநிலையில் தனிப்படை போலீசார் வசந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர் . வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே முன்னாள் ஆய்வாளர் வசந்தி ஜாமின் பெற்று  நிபந்தனை ஜாமினில்  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

சினிமா பாணியில் கைதி ;

இந்நிலையில், வழக்கின் சாட்சியான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவரை மிரட்டி சாட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக  புகார் வந்தது.  இந்த தகவலை அடுத்து ,  மதுரை சிலைமான் மற்றும் ஊமச்சிகுளம் காவல் நிலையத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி அவுட்போஸ்ட்,  அருகே காரில் சென்ற முன்னாள் ஆய்வாளர் வசந்தியை  விரட்டிப் பிடித்தனர்.

முதற்கட்டமாக கைதுசெய்யப்பட்ட வசந்தி ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக  அடைத்துவைக்கப்பட்டார் . பின்னர் புகார் அளிக்கப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்த தனிப்படை போலீசார் , வசந்தியை சிறையில் அடைத்தனர் . சினிமா பட காட்சியைப்போல் நடத்த இந்த கைது சம்பவம் , இங்கு கூடி இருந்த பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review