குமரி மாவட்டத்தின் தமிழக – கேரளா எல்லை பகுதியான பனச்சமூடு பகுதியை அடுத்த மாங்கோடு பகுதியை சார்ந்த ராஜன் – குமாரி தம்பதியினரின் மகள் 23 வயதான அனு.இன்ஜினியரிங் பட்டதாரியான அனுவிற்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
உறவினர்களின் திருமணம் ஒன்றிக்கு சென்றிருந்த அனுவை பார்த்து பிடித்துப் போன நபர் ஒருவர் வீட்டில் பெண் கேட்டு சென்றுள்ளார்.வீட்டாருக்கும் பிடித்த போன நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 -ஆம் தேதி 40 பவன் நகையும் போட்டு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்து தனது மகளை திருமணம் செய்தும் வைத்துள்ளனர்.
அனுவை திருமணம் செய்த 31 வயதுடைய ரஜித் என்பவர் கேரளா மாநிலம் நெய்யாற்றிக்கரை பகுதியை சார்ந்தவர். தனக்கு பஞ்சாயத்தில் வேலை என கூறி வீட்டாரை ஏமாற்றி திருமணம் செய்தும் உள்ளர். இவர் ஆட்டோ ஓட்டுனர் உட்பட பழைய வாகனங்களை விலைக்கு வாங்கி விற்பவரும் கூட.
திருமணம் ஆகிய ஒரு சில நாட்களிலே தனக்கு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும், பெண் குழந்தையாக இருந்தால் அதிக செலவுகளும் வரும் என அனுவிடம் அவ்வப்போது கூறியும் வந்துள்ளார்.மேலும் அனுவின் குடும்பத்தார் கிறிஸ்தவர், ரஜித் இந்து மதத்தவர்.
இவருக்கு ஜாதகம் ,மாந்தீரிகம் போன்றவற்றில் நம்பிக்கைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அனுவை செப்டம்பர் மாதம் ரஜித் அவரது அம்மா வீட்டிற்கு கொண்டு விட்டுள்ளார்.
ஆனால் பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்ததும் குழந்தையை ஏதாவது அனாதை மடத்தில் விட்டு விட்டு வா என்றால் வீட்டிற்குள் ஏற்றுகிறேன் இல்லையென்றால் வர வேண்டாம் எனவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

பெண் குழந்தை என்ற ஒரே காரணத்திற்காக கடந்த ஆறு மாதமாக குழந்தையையும் – தன்னையும் இதுவரையிலும் பார்க்கவே வரவில்லை எனக் கூறுகிறார் அனு .ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த குடும்பத்தார் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையம் உட்பட கேரள மாநிலத்தில் உள்ள பூவார் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர் ஆனால் அங்கு பணம் மட்டும் கட்சி பலம் வைத்து தப்பித்து உள்ளார் ரஜித்.
இது குறித்து அனு கூறுகையில் பெண் குழந்தை பிறந்ததால் மட்டும் தான் தன்னை கைவிட்டார் – வீட்டு பெரியவர்கள் சென்றாலும் அவரை நேரில் சந்தித்து பேச முயன்றாலும் தகாத வார்த்தைகளை கூறி திட்டுவதும் மறுத்தும் விடுவார் – ஜாதக ரீதியாக எதையோ நம்பி என் வாழ்க்கையை கெடுத்து விட்டார்.எனக்கு அவருடன் வாழ இனி விருப்பமும் இல்லை ஆனால் ம மாதமான குழந்தையின் கதி என்ன என்ன தான் என யோசிக்கிறேன்- குழந்தையின் மொத்த செலவுகளையும் அவர்தான் பார்க்க வேண்டும் -தமிழகத்தில் பெண் சிசுக்கொலை தடுப்புச் சட்டம் என பல சட்டங்கள் வந்தும் எந்த பலனும் இல்லை, காவல் நிலையத்தில் பல புகார்கள் அளித்து ஆறு மாத குழந்தையுடன் காவல் நிலையம் ஏறி இறங்குவது மட்டும் தான் நடக்கிறது -இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- எங்களுக்கு நீதிதான் வேண்டும் எனவும் கூறுகிறார் கூறுகிறார் அனு.
படித்து முடித்து வேலைக்காக காத்திருந்த தன்னை பிடித்ததாக கூறி வந்து திருமணம் செய்துவிட்டு ,பெண் குழந்தை பிறந்ததால் தன்னை ஏமாற்றியும் விட்டு ,ஜாதகம் மதம் எனக் கூறி கைவிட்டு விட்டு மீண்டும் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிடுவதாகவும் பலரும் கூறி வருகின்றனர் இவர்களைப் போன்றவர்களை கைது செய்து தக்க தண்டனை அளிப்பதுடன் தனக்கும் , தனது குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும் கூறுகிறார் அனு.