தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசு நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காக 501 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதிகளாக தந்தார். ஆகவே ஒரே கையெழுத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கின்ற அந்தத் தேர்தல் வாக்குறுதிகளை இன்றைக்கு திமுக அரசு பின்வாங்கி இருக்கிறதோ என்கின்ற ஒரு சந்தேகம் மாணவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது.
ஏனென்று சொன்னால் இன்று ஆட்சி பொறுப்புக்கு வந்து 25 மாதங்கள் கடந்து ஏறத்தாழ 2 ஆண்டுகளைக் கடந்து இப்பொழுது நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கக்கூடிய சூழ்நிலையிலே இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் தோல்வியுற்று நின்று கொண்டிருக்கிறது. ஆகவே இதை திசை திருப்புகின்ற ஆளுங்கட்சி அதிகாரம் வைத்துக் கொண்டிருக்கிற கட்சி திமுக கட்சி என்கிற அந்த நிலையிலே அது முற்றிலுமாக அதிகாரம் வைத்து மக்களுக்கான திட்டங்களை செய்து கொடுக்க முடியவில்லை கொண்டு வர முடியவில்லை பெற்று தர முடியவில்லை என்ற தோல்வி யுகத்தை மடைமாற்றம் செய்வதற்காக திசை திருப்புவதற்காக இன்று கையெழுத்து இயக்கம்.
ஒரு கையெழுத்திலேயே நாங்கள் நீட் ரத்து செய்வோம் அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு கோடி கையெழுத்து தேவை என்று அவர்கள் கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். இந்த கையெழுத்து இயக்கத்தை இன்னும் மாணவர்களை பெற்றோர்களை நம்ப வைத்து அவர்களை ஏமாற்றி அவர்கள் தற்கொலைக்கு தூண்டுகின்ற நிலையை தான் நாம் பார்க்கிறோம். ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து சாமானிய அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்கள் மருத்துவ கனவை நிறைவேற்றுவதற்காக சமூக நீதியை காப்பதற்காக ஏழை எளிய சாமானிய ஒடுக்கப்பட்ட இருக்கக்கூடிய மாணவர்களை கைப்பிடித்து கரம் பிடித்து அவர்களுடைய மருத்துவ மாணவர் கனவுகளை நிறைவேற்றி தருவார் ஐயா எடப்பாடி அவர்கள்.

அதாவது இன்றைக்கு நிலைமை என்ன இன்றைக்கு நாங்கள் ஆட்சி புரிந்து இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்து செய்வோம் என்று சொன்னவர்கள் இன்றைக்கு மத்தியிலே நாங்கள் ராகுலை பிரதமராக்கிய பிறகு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தன் மீது இருந்த அழுத்தத்தை தன் மீது இருந்த பொறுப்பை கடமையை வேறொருவர் தலையிலே சுமத்துகிறார்கள். அதன் மூலமாக வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மக்களை நம்ப வைத்து பெற்றோர்களை நம்ப வைத்து மாணவர்களை நம்ப வைத்து வாக்கு அறுவடை செய்கின்ற நோக்கத்திலேயே தான் இதை சொல்கிறார்களே தவிர வாக்குகளை நிறைவேற்றுகிற வகையில் இந்த கையெழுத்து இயக்கம் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தும் முதல் கையெழுத்தை போடுகிறேன் என்று சொல்கிறார். ஒரு கையெழுத்தையே நீட் தேர்வை ரத்து செய்கிற ரகசியம் என்னவென்று இன்று வரை சொல்லாத உதயநிதி ஸ்டாலினும் மு க ஸ்டாலின் அவர்களும் கையெழுத்து இயக்கம் என்று யாரை ஏமாற்றுகிறார்கள்.
இன்றைக்கு கையெழுத்து இயக்கத்தினால் எந்த பிரயோஜனமும் ஏற்பட போவதில்லை இதனால் என்ன நன்மை ஏற்படப்போகிறது. ஆகவே அடுத்து கொடுக்க வேண்டிய மத்திய அரசுக்கு அதிகாரத்தை கையில் வைத்து இருப்பவர்கள் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் நீங்கள் நீட் தேர்வை ரத்து செய்வதில்லை என்று சொன்னால் இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து எங்களை 38 பேர்களை அனுப்பினீர்களே அந்த 38 பேர்களும் ராஜினாமா செய்ய தயார் என்று மு. க. ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் அறிவிக்க தயாரா? காவிரி உரிமையை நீங்கள் பெற்றுத் தரவில்லையே அதற்கு 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை நீங்கள் ராஜினாமா செய்செய்வதாக சொல்ல தயாரா? நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்று சொன்னால் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வோம் என்று சொல்ல அறிவிக்க துணிச்சல் இருக்கிறதா? மக்கள் மீதான அக்கறை இருக்கிறதா மாணவர் மீது அக்கறை இருக்கிறதா? ஏதோ உப்புக்கு சப்பாக மக்களை ஏமாற்றுகிற தோல்வி முகத்தை மறைமாற்றும் வகையிலே இன்று கையெழுத்தை இயக்கம் நடத்துவது மூலமாக என்ன பயன் ஏற்பட போகிறது.
எத்தனை கையெழுத்து இயக்கங்கள் எங்கே தூங்கிக் கொண்டிருக்கிறது? ஆகவே இதையெல்லாம் மக்களை ஏமாற்றுகிற ஒரு செயல். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கு ஒரு தவறான நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிற ஒரு நிலை. இந்த 28 மாத காலங்களில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு யார் பொறுப்பேற்பது? இந்த ஆட்சியாளர்கள் பொறுப்பேற்பதா? ஆட்சியாளர்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு தவறான நம்பிக்கையே ஏற்படுத்தி அதை மனதிலே விதைத்து இன்றைக்கு கையாளாகாதவர் கையில் கொடுத்ததின் காரணமாக தங்கள் இயலாமையை நினைத்து மன அழுத்தத்தினால் தற்கொலைக்கு செல்கிறார்கள் இந்த மாணவ செல்வங்களின் உயிருக்கு ஈடு இணை இல்லை அதை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு ஈடு இணைக்கு என்ன செய்வது? எனவே மீண்டும் மீண்டும் இது போன்ற ஒரு தவறான தோல்வி முகத்தை மடைமாற்றம் செய்கின்ற வகையிலே நீட் தேர்வு ரத்து நமது இலக்கு என்ற வசனங்கள் எல்லாம் பேசாமல் உண்மையிலேயே மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி நீங்கள் வைத்திருக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி அவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி உரிமையைப் பயன்படுத்தி கடமையைப் பயன்படுத்தி நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள்? இதெல்லாம் எடுக்க வேண்டிய இடத்திலே எடுக்காமல் பேச வேண்டிய இடத்தில் எல்லாம் பேச வேண்டியதை விட்டுவிட்டு தோல்வி அடைந்து விட்டு அந்த தோல்வியை ஒப்புக் கொள்வதற்கு கிராதி இல்லாத உதயநிதி ஸ்டாலினும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் என்ற அவர்கள் தோல்வி முகத்தை மடை மாற்றுவதற்காக இன்று மக்களை சந்திக்கிறேன் மக்களிடையே கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம் என்று சொல்வது வெட்கக்கேடானது வேதனைக்குரியது.
இதை திமுக அரசு தோல்வியை மடை மாற்றுவதற்காக இந்த கையெழுத்து இயக்கமே தவிர இதனால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் இதில் இந்த மாணவச் செல்வங்களுக்கு இந்த கையெழுத்து இயக்கத்திலே துளியும் நம்பிக்கை இல்லை என்பது எதார்த்தமான உண்மை கட்டாயப்படுத்தி வேண்டுமானால் கையெழுத்தை வாங்கலாவாங்கலாமே தவிர யாரும் தானாக முன்வந்து இந்த கையெழுத்து இயக்கத்திலே பங்கேற்க மாட்டார்கள் என்பதுதான் இப்போது கவலைக்கிடமாக இருக்கிறது என்பதை சொல்லி கையெழுத்து இயக்கத்தின் நடத்தி தனது தோல்வியை மறைக்க முயற்சி செய்கிற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே உண்மையிலேயே இந்த மாணவச் செல்வங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்வது எப்போது அந்த நல்ல செய்தியை எப்போது பெற்று தருவீர்கள் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.