லாட்டரி
பொது மக்கள் நலன் கருதி தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பணைக்கு தடை விதித்தது.லாட்டரி சீட்டு வாங்குவதால் ஏழை குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.லாட்டரி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து ஆன்லைன் லாட்டரி விற்பணை தமிழகம் முழுவதும் பரவலாக விற்கத்தொடங்கியது.இதில் நட்டம் ஏற்பட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கண்ட நிகழ்வெல்லாம் தமிழகத்தில் நடந்ததை அறிவோம்.இது போன்ற நிகழ்வுகள் நடை பெறாமல் இருக்க காவல் துரை லாட்டரி விற்பணையை தடுக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவானது கிராமங்கள் கிராமங்கள் சூழ்ந்த பகுதியாகும் இப்பகுதியில் அதிகளவில் பூக்கள் பழங்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது இப்பகுதி மக்கள் விவசாயத்தையும் விவசாயக் கூலித்தொழிலாளர்களாகவும் வேலை செய்து வருகின்றனர் நிலக்கோட்டை தாலுகாவில் கொடையரோடு. அம்மைய நாயக்கனூர், சிலுக்குவார்பட்டி. நிலக்கோட்டை. வத்தலகுண்டு உள்ளிட்ட அதிக அளவு வெளியூர் வியாபாரிகள்.கொடைக்கானல் கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கொடைரோடு பேருந்து நிலையம்.ரயில் நிலையம் முன்புறம் மற்றும் டீக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போலி லாட்டரி டிக்கெட் விற்பனையாகிறது.இந்த விற்பணை அதிக அளவில் நடைபெற்று வருகிறது ஒரு நம்பர், இரு நம்பர், மூன்று நம்பர், நான்கு நம்பர் என்று துண்டு சீட்டுகளில் எழுதி வைத்து லாட்டரி விற்பனையாளர்கள் 1 லாட்டரி ரூபாய் 50 முதல் ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறனர். வெளியூர் பயணிகள் மற்றும் கொடையரோடு. அம்மைய நாயக்கனூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் லாட்டரி சீட்டை வாங்கி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்
அம்மைய நாயக்கனூர் மற்றும் நிலக்கோட்டை வத்தலகுண்டு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து நிலக்கோட்டை தாலுகாவில் அதிகளவு விற்பனையாகும் லாட்டரி விற்பனையை தடை செய்ய வேண்டும் லாட்டரி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இல்லையென்றால் தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்டம் போன்று உயிரிழப்பு நடப்பதை தடுக்க முடியாமல் போய்விடும்.தமிழக அரசு நடவடிக்கை எடுகுமா?