2 ஆண்டுகள் சிறை தண்டனையிலிருந்து விடுதலை ஆவாரா ராகுல் ? அவதூறு வழக்கில் தீர்ப்பு இன்று .

1 Min Read
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி .

சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட  2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய அவரது மனு மீதான தீர்ப்பை , குஜராத் உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கவுள்ளது.

- Advertisement -
Ad imageAd image


இந்த வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடகா மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி ராகுல் இழிவாக பேசியதாக  அவர்மீது அவதூறு  வழக்கு தொடரப்பட்டது .

பாஜக சட்டமன்ற உறுப்பினர் பூர்ணேஷ் மோடி


கடந்த 2023 ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


இந்த வழக்கானது , கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, ​​கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி “எல்லாத் திருடர்களுக்கும் மோடி என்கிற குடும்பப் பெயர் எப்படி பொதுவாக இருக்கின்றது ” என்று ஒட்டுமொத்த மோடி சமூக பெயரை அவதூறாக பேசியதாக , பாஜக சட்டமன்ற உறுப்பினர் பூர்ணேஷ் மோடி, நீதிமன்றத்தை அணுகி ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்று தொடர்ந்தார் .

குஜராத் உயர்நீதிமன்றம் 


இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளியென சூரத் நீதி மன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தது , இதன் தொடர்ச்சியாக அவரை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததோடு நில்லாமல் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியது .


ராகுல் காந்தி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவினை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹெல்மண்ட் பிரச்சக் அவரது மனுவினை ஏற்று கடந்த மே மாதம் 2  ம் தேதி அவரது தண்டனையை  ஒத்திவைத்தார்.


இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று குஜராத் நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது .

Share This Article
Leave a review