வால்பாறை சாலக்குடி சாலையில் லாரியை ஆக்ரோசமாக தாக்க வந்த காட்டு யானைகள்.

2 Min Read
யானைகள் கூட்டம்

யானைகள் கூட்டம்

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்ட வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியில் யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி வருகிறது. வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணிகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில் சில தினங்களாக ஒற்றைக்காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் பேருந்து வழி மறிப்பதும், குடியிருப்பு அருகில் சுற்றுவதுமாக இருந்து வருகிறது சின்கோனா பெரியகல்லார் சாலையில் ஒற்றைக்காட்டு யாணை நடந்து வந்தது. இதை பார்த்த தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பயந்து பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். யானை சாலையில் நடந்து சென்ற தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வால்பாறையில்

வனவிலங்குகள்

கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில், தேயிலை தோட்டத் தொழில் முக்கிய வாழ்வாதரமாக உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் வால்பாறை இருந்து வருவதால், யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கிராமப் பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைவது வழக்கம்.

வால்பாறை மற்றும் மானம்பள்ளி வனச்சரகங்கள் அடர் வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இப்பகுதிக்கு அருகில் தேயிலை தோட்டங்கள் உள்ளதால் வனப் பகுதியை விட்டு வெளியே வரும் யானை, சிறுத்தை, மான், புலி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் தேயிலை தோட்டம், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் தென்படுகிறது. அண்மை காலமாக அப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு யானைகள் ரேசன் கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.

யானைகள் கூட்டம்

காட்டுயானைகள்

இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

வால்பாறையில் இருந்து சாலக்குடி நோக்கி லாரி ஒன்று சென்றது மழுக்குப்பாறை தாண்டி சென்று கொண்டிருந்த பொழுது சாலை ஓரத்தில் கூட்டமாக யானைகள் நின்று கொண்டிருந்தன.காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நிற்பதை பார்த்த லாரி ஓட்டுநர் லாரியை மெதுவாக நிறுத்தினார்.பின்னர் யானைகள் லாரியை ஆக்ரோசமாக தாக்க ஓடி வந்தது சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டிருந்ததால் யானைகள் லாரியின் அருகில் வந்து நின்று கொண்டு திரும்ப சென்றது இதனால் லாரி ஓட்டுநர் உயிர்தப்பினார்.

Share This Article
Leave a review