கடந்த இரண்டு மாதங்கள் முன்பு யானை கூட்டங்கள் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரிந்தது பின்பு வனத்துறையினரால் விரட்டப்பட்டது.

இந்நிலையில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் மீண்டும் யானைகள் மலையேற துவங்கியுள்ளது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை 12வது மற்றும் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே மலை ரயில் பாதையில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. அதனை வனத்துறையினர் விரட்ட சென்றபோது வனத்துறையினரை காட்டு யானை திருப்பி விரட்டியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.