அதிமுக கொடியை பயன்படுத்துவதில் மோதல்.தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புதான் அதிமுக என அறிவித்திருந்த நிலையில் அதிமுக கொடியைபயன்படுத்தும் விவகாரத்தில் சேலத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் வாக்குவதம் ஏற்பட்டது.
சேலம் மாநகர் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக இந்த கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலையில் இருபுறங்களிலும் அதிமுக கொடி கம்பங்களை நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இதனை அறிந்த அதிமுகவின் இபிஎஸ் அணியினர் உடனடியாக சுப்பராயன் சாலையில் கொடிக்கம்பங்களை நடும் பகுதிக்கு சென்று,அங்கிருந்தவர்களிடம் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று கூறி அவற்றை அகற்றினர். இதனை அடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் உடனடியாக இரு தரப்பினரையும் விலக்கி பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையினரின் தலையிட்டால் அங்கு நிகழவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டது . பின்னர் இரு தரப்பினரும் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார்? கொடியை பயன்படுத்தலாம் என திட்டவட்டமாக அறிவித்தால் இது போன்ற பிரச்சனை நடைபெறாது.நீதி மன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.