பாம்பு என்றால் எல்லோருக்கும் பயம் தான், பாம்பு என்றால் படையும் நடுங்கும்.சுந்தராபுரம் பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த ஓர் வகை நாகப்பாம்பு பிடிபட்டது. தண்ணீர் தொட்டியில் வழக்கம் போல் தண்ணீர் நிறப்ப சென்றிருக்கின்றனர் அப்போது தான் ஓர் வகை கண்டறியப்பட்டது.அப்போது பயந்துவிட்டார்கள்.

பாம்பு இருப்பதை அந்த வீட்டின் உரிமையாளர் பார்த்திருக்கின்றார்கள்.அதனைப் பார்த்ததும் உடனடியாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் தெரிவித்தார்கள் அப்போது பாம்பு பிடி வீரரான மோகன் என்பவரை அழைத்து சென்று,தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு இருப்பதனை தெரிவித்து இருக்கின்றார். உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்ற மோகன் பாம்பை பார்த்திருக்கின்றார். அந்தப் பாம்பானது அரிதாக வனப்பகுதியில் உலா வருகின்ற வெள்ளை நாகம் என்பது தெரியவந்தது. அப்போது தான் பாம்பு பிடி வீரரான மோகன் பிடிக்க முயலுகிறார்கள்.

பார்சியல் ஆல்பினோ கோப்ரா என்ற வகையைச் சார்ந்த இந்த வெள்ளை நாகம்பாம்பு பிடி வீரரான மோகன் என்பவர் பத்திரமாக பிடிக்கப்பட்டார். இரண்டடி நீளம் கொண்ட இந்த பாம்பு, பாம்பு பிடி வீரர் மோகனால் பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போன்று வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டது.இதனால் சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டிருக்கின்றது. மழைக்காலம் என்பதனால் இனி பாம்பு பொது இடங்களில் வெளியே உலாவும். பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பாம்பை மீட்க உதவ வேண்டும் என பாம்பு பிடி வீரர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.அந்த வெள்ளை நீற நாகம்பாம்பு பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது.