நடப்பாண்டு 2023-24 ரபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. நடப்புப் பருவத்தில் 30.05.2023 வரை 262 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 188 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், அதைவிட 74 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள்முதல் அதிகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 21.27 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.47,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 121.27 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 70.98 மெட்ரிக் டன் அளவிற்கும், ஹரியானா மாநிலத்தில் 63.17 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கும் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அரிசி கொள்முதலைப் பொறுத்தவரை 30.05.2023 வரை 385 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் உணவுத் தானியங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கோதுமை 312 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கும் அரிசி 267 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கும் மத்திய அரசின் தொகுப்பில் உள்ளது.