சமுத்திரயான் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? முழு விவரம்

1 Min Read
அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் மத்திய துறை திட்டமாக, அமைச்சரவையின் ஒப்புதலுடன் 07.09.2021 முதல், ஆழ்கடல் இயக்கம் தொடங்கப்பட்டது. சமுத்திரயான் என்பது ஆழ்கடல் இயக்கத்தின்  ஒரு திட்டமாகும்.

- Advertisement -
Ad imageAd image

ஆழ்கடல் இயக்கத்தின் சமுத்திரயான் திட்டத்தின் கீழ், இதுவரை மட்ஸ்யா 6000 என்ற மனிதர்களுடனான நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு முடிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ், ஓஷன் மினரல் எக்ஸ்ப்ளோரர் (ஓஎம்இ 6000) எனப்படும் ஆழ்கடல் நீருக்கடியில் இயங்கும் வாகனம் (ஓஎம்இ 6000) ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்திய பெருங்கடலின் மத்தியப் படுகையில் (சி.ஐ.ஓ.பி) சர்வதேச கடற்பகுதி ஆணையத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியில் 5271 மீட்டர் ஆழத்தில் சாகர் நிதி என்ற ஆராய்ச்சிக் கப்பலைப் பயன்படுத்தி டிசம்பர் 2022-ல் ஆழ்கடல் கனிம ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2021-2026 ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக ரூ.4077 கோடி மதிப்பீட்டில் ஆழ்கடல் இயக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.405.92 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ரூ.225.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review