என்ன செய்தார் எம்.பி., வேலூர் சட்டமன்றத் தொகுதி.!

0
195
கதிர் ஆன்ந்த்

இந்த தொகுதியில்

2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது,
ஆனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத
பெரும் தொகையை மீட்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று,
இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.

கதிர் ஆனந்த் (D. M. Kathir Anand)  

17வது நாடாளுமன்ற உறுப்பினர்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில் , திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் பொருளாளருமான துரைமுருகன் மகனும் ஆவார்.

வேலூர் தொகுதியில் இருந்து 2019 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக கதிர் ஆனந்த் போட்டியிட்டு 4,85,340 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1995ல் லயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்தார்.

1997ல் இவர் அமெரிக்காவில் இருந்து எம்பிஏ படித்தார்.

தந்தை பெயர்; துரைமுருகன்

தாயார் பெயர்; சாந்தகுமாரி துரைமுருகன்

துணைவர் பெயர்; சங்கீதா துணைவர் தொழில் குடும்ப தலைவி

குழந்தைகள் 1 மகன்  2 மகள்(கள்)


வேலூர் தொகுதி மக்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தோம்.

சாம்சன்

அந்த தொகுதியை சேர்ந்த சாம்சன் கூறும் போது.இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
கதிர் ஆனந்த் தேர்தலின் போது நிறைய வாக்குறுதிகளை கொடுத்தார்,சில வாக்குறுதிகளை
நிறைவேற்றினாலும் தாமதமாகத்தான் நிறைவேற்றினார்.மக்களின் அடிப்படை தேவையான
சாலை வசதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமலே உள்ளது.ஸ்மார்ட் சிட்டி என்று அறிவித்தார்கள்
வேலூரை இன்னுஅமும் ஸ்மார்ட் ஆகவே இல்லை வேலூர்.இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள்
இன்னமும் பூர்த்தி செய்யப்படாமலே உள்ளது.மக்களின் எதிர்பார்ப்பு இன்னமும் எவ்வளவோ இருக்கிறது.
ஆனால் செய்யதான் ஆள் இல்லை என்றார்.மேலும் அவர் கூறுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லோருக்கும்
அறிமுகமானவர்தான் அவருடைய அப்பா மூலமாக அனால் இன்னமும் அவர் மக்கள் முன் ரீச் ஆக வில்லை என்றார்.

பொன்னரசி

மேலும் வேலூர் மக்களவை தொகுதியை சேர்ந்த பொன்னரசி கூறும் போது,வேலூர் மக்களவை தொகுதியை பொருத்தவரை மின் விளக்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.சத்துவாச்சேரி சுரங்கப்பாதை அமைத்தது சிறப்புவாய்ந்தது.ஆனால் சாலை வசதிகள் தான் மோசம்.அதுபோல சாலை அமைப்பதால் வீடுகளுக்கு குடிநீர் வருவதில் சிக்கல் அதனால் பொது மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.இந்த தொகுதி சுற்றுலா தளமாகவும் இருப்பது இன்னும் கூடுதல் வசதிகள் தேவைபடுகிறது.மேலும் இந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கதி ஆனந்த் அவர்களை எளிதில் பார்க்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாது.வேலைவாய்ப்பு உள்ளிட்ட இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்றார்.

அசோக் குமார்

கே.வி குப்பம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் கதிர் ஆனந்த் என்பவர் தான் நாடாளுமன்ற உறுப்பினர் அப்படி சொன்னால் யாருக்கும் தெரியாது அமைச்சர் துரைமுருகன் மகன் என்றால் தான் தெரியும்.நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்ய வில்லை இந்த தொகுதிக்கு என்பதைவிட அவர்கள் சொந்த ஊருக்கே இதுவரை எதுவும் செய்ய வில்லை.இந்த தொகுதிக்கு வர இருந்த அரசுக் கல்லூரியே அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை.அமைச்சர் துரமுருகனும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தும் நினைத்தால் இந்த தொகுதிக்கு எதுவேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் எதுவும் செய்யவில்லை என்றார்.இந்த தொகுதிக்கு வேண்டியது இன்னும் எவ்வளவு தேவை இருக்கிறது எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுகிறவர்கள் செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

https://youtu.be/_7HzJcorIGo?si=huwh7lt8W6zBf__t

ஒருபக்கம் வேலைவாய்ப்பு மறுபக்கம் தோல் தொழிற்சாலைகளால் மக்களுக்கு பாதிப்பு,தண்ணீர் தட்டுப்பாடு,வெயிலின் தாக்கம்,போக்குவரத்து நெரிசல் இவையெல்லாம் எப்போது தீருமோ என காத்துக்கிடக்கிறார்கள் வேலூர் மக்களவை தொகுதிமக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here