ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அமைச்சர் தங்கம் தென்னரசு

2 Min Read
அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்  நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

- Advertisement -
Ad imageAd image

செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு‌ கூறியதாவது,

சட்டப்படி அமைச்சரை நியமிக்கவும்,நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது இந்த விவகாரம் தொடர்பாக‌‌ஆளுநருக்கு விரிவான கடிதத்தை முதல்வர் இன்று எழுத உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளை நாங்கள் நிராகரிப்பதாகவும், முதல்வரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அமைச்சரின் நியமனம், நீக்கம் தொடர்பான விவகாரதில் ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

இல்லாத பூனையை இருட்டில் வீட்டுகுள் தேடுவது போல ஆளுநர் செயல்பட்டு வந்தாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு,மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பை எய்தலாம் எனும் நோக்கில் எதிர் கட்சியினர்  மட்டுமல்லாமல் ஆளுநரும் திமுக வினர் மீதான தாக்குதலில் ஈட்டுப்பட்டு வருவதாக கூறினார்.

மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் அமைச்சர்களாக தொடர்கின்றனர்.‌‌ஆளுநர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜி மீதான இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்.

மேலும் திமுக இதுபோன்ற விவகாரங்களை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளும் எனவும், எந்த ஆயுத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த மோதல் போக்கை ஆரம்பித்து வைத்தது ஆளுநர் தான் எனவும் குறிப்பிட்டார்,

இதனை தொடர்ந்து எந்தெந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பதை முதல்வர் முடிவு செய்வார் எனவும்

செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி

செந்தில் பாலாஜி இலாக இல்லாத அமைச்சராக தொடர்கிறார் எனவும் ஆகவே இது விசாரணைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் வில்சன்

அரசியல் அமைப்பு சட்ட சரத்துக்களை பின்பற்றாமல் செயல்படும் ஆளுநரின் இது போன்ற செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட வேண்டியவை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் ஆளுநரின் உத்தரவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றில்லை அது நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Share This Article
Leave a review