தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆனந்த காவிரி வாய்க்காலில் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இந்த நிகழ்வில் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன் நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
இந்த நிகழ்வின் போது நிகழ்ச்சி தொடங்கும் இடத்திற்க்கு எதிரில் குடிசை வீடுகள் நிறைந்திருந்தது.அவற்றை அமைச்சர்கள் பார்க்காமல் இருக்க அந்த பகுதியை மறைத்து திரை கட்டியிருந்தனர்.

நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, டெல்டா மாவட்டங்கள் குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன ஆதாரங்களை தூர்வாரிட திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் 90 கோடி ரூபாய் மதிப்பில் 636 இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தஞ்சை மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பில் 189 பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பாசனக்காரர்கள் சபையும் மகிழத்தக்க வகையில் தூர் வாரும் பணிகள் அமையும் பொதுப்பணித்துறையின் மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தூர்வாரும் பணிகள் நிதியினை நிதி அமைச்சர் ஒதுக்கி உள்ளார். காரணம் மழை வெள்ளம் காலங்களில் பாதிப்பு இல்லாமல் கடைமடை வரை தடையின்றி தண்ணீர் போக வேண்டும் என்பதற்காக தான் என்றும், கர்நாடக அரசிடமிருந்து உரிய நீர் பங்கீடு பெறப்படுகிறது என்றும், பவானி ஆற்றில் தரையில் சிமெண்ட் தளம் அமைக்கப்படவில்லை இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று விவசாயியாக தான் உணர்வதாகவும், தஞ்சை மாவட்டம் கல்லணை கால்வாயில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும், தூர்வாரும் பணி எப்போது முடியும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் தூர்வாரிய பிறகு முடியும் என்று நகைச்சுவையுடன் கிண்டல் அடித்தார். முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு எதிராக உள்ள குடிசை வீட்டை துணியால் கொண்ட திரை மறைப்பை போட்டிருந்தது தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது.ஏன் அமைச்சர்களுக்கு குடிசை வீடுகள் தெரியக்கூடாது என்பதற்கா? அல்லது தமிழ்நாட்டில் குடிசை வீடுகளே இல்லை என்பதை காட்டவா! என்று தெரியவில்லை?