ஒவ்வொரு நாளும் தமிழக முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது பொதுமக்கள் இதனால் ஏராளமான சிரமத்திற்கு உள்ளாகின்றனர் வெயில் வாட்டி வதைப்பதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீர் சத்துக்கள் மிகுந்த உணவுகளை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்திருந்த நிலையில் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் என ஒவ்வொரு ஊரிலும் தண்ணீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களின் தாகம் தீர்த்து வருகின்றன.

அந்த வகையில் விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் தண்ணீர் பந்தல் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் ஆர்கே அறிவழகன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை தொடங்கி பொதுமக்களுக்கு இளநீர் முன்பு தர்பூசணி மோர் உள்ளிட்ட பானங்களை வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் பங்கு கொண்டு நீர் மோர் பந்தலில் பழ வகைகளை உண்டு தங்களின் தாகம் தீர்த்தனர்.
இந்த நிகழ்வு ஐஜேகே கட்சியின் சார்பில் நிகழ்த்தப்பட்டது.இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. பகவதி சுரேந்தர் மாவட்ட செயலாளர் திரு. ஜான்ராஜ், மாவட்ட பொருளாளர் திரு.வேல்ராஜ், நகர செயலாளர் திரு.A. இப்ராஹிம், நகரத் தலைவர் திரு. ராகுல், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் திரு. ராகுல், மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் திரு.டேனிஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திரு. சௌந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி திரு.செந்தில் விநாயகம், நகர இளைஞரணி செயலாளர் திரு. B.குணா , மற்றும் ஐஜேகே நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.