பள்ளிகொண்டாவில் செயல்படும் அரசு மாணவர் தங்கும் விடுதியில் பள்ளி மாணவர்களை வைத்து அரிசி மூட்டைகளை இறக்கிய அவலம் , வேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
இங்கு பெரும்பாலும் அணைக்கட்டு அடுத்த அல்லேரி பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைப் பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் , பிள்ளைகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயில்வதற்காகவும் , பள்ளிகொண்டாவை சுற்றியுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.சி.எம் பள்ளி, மற்றும் குடியாத்தம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் சேர்ந்து 50 கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

மலை பகுதிகளுக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகொண்டா பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி பயில்கின்றனர் .
இந்த மாணவர்கள் விடுதியில் 50 மாணவர்கள் வரை தங்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது அதேபோல அரசு மூலம் இலவச உணவு பொருட்களும் இங்கு தங்கி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் மாணவர்களுக்கு உணவு தயார் செய்யவதற்காக மாதந்த்தோரும் அனுப்பப்படும் ரேஷன் பொருட்களை உணவுப் பொருட்களை விடுதியில் தங்கும் மாணவ அங்கு தங்கும் மாணவர்களை கொண்டே இறக்கி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது .
இதனை அந்த விடுதி காப்பாளர் முன்னின்று செய்வதாக அங்கு வசிக்கும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

மலைப்பகுதியில் ஆரம்ப கல்வியை பயின்ற மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுமார் 25 கிலோமீட்டர் அப்பால் உள்ள பள்ளிகளில் சேர்த்து கல்வி பயிலவும் அதேபோன்று சரியான போக்குவரத்து வசதியில்லாததாலும் தங்கள் பிள்ளைகளை அரசு மாணவர் விடுதியில் சேர்த்த பெற்றோர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற செயல்களில் ஈடுபட்ட விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்ட போது , சம்பந்தப்பட்ட காப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டு , உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் .