கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் அவர்கள் நடிகர் விவேக் நினைவு நாள் முன்னிட்டும், பொது மக்களிடையே விவேக்கின் மரம் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பிரஷ்க்கு பதிலாக ஆலமர “விழுது” மட்டுமே பயன்படுத்தி நடிகர் விவேக் உருவத்தை வரைந்தார்.
நடிகர் விவேக்கின் நகைச்சுவை திறமை ரசிகர்கள் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது. தன்னுடைய நகைச்சுவை நடிப்பில் காமெடி மட்டுமல்ல பல சமூக கருத்துக்களையும், பகுத்தறிவனை நகைச்சுவையாக சொன்னவர். விவேக்கின் இன்னொரு பக்கம் அனைவரும் அறிந்தது மரம் வளர்ப்பு பணி ஆகும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர் வழியில் பயணித்த நடிகர் விவேக் அப்துல் கலாம் ஐயா ஒப்படைத்த மரம் வளர்க்கும் பணியை தனது மூச்சிருக்கும் வரை செய்தார்.
மரம் வளர்ப்பதை அனைவரும் மனதிலும் விதைத்தவர், இயற்கை முக்கியத்துவத்தை பறைசாற்றியவர் விவேக் ஆவார்.
நடிகர் விவேக் நினைவு நாள் முன்னிட்டும், அவரது கனவான மரம் வளர்ப்பு பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரஷ் பயன்படுத்தாமல்! ஆலமரத்தில் தொங்குகின்ற “விழுதை” பிடித்துக்கொண்டு நீர் வண்ணத்தில் தொட்டு நடிகர் விவேக் படத்தை 15 நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் வரைந்தார்.
ஓவிய ஆசிரியர் செல்வம் பல தலைவர்களின் படங்களை வித விதமாக வரைந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.