பி.எஸ்.என்.எல் மொபைல் வேனிட்டி எண்களின் மின்-ஏலம்!

1 Min Read
பி.எஸ்.என்.எல் மொபைல்

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 25.05.2023 முதல் 31.05.2023 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 31.05.2023 ஆகும்.

- Advertisement -
Ad imageAd image

மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு மொபைல் எண் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும். சில நபர்களுக்கு ஃபேன்ஸி எண் வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.

குறிப்பாக, சிலருக்கு நம் பிறந்த தேதி, வருடம் அல்லது வாகன எண் அல்லது ஏதோ பிடித்த எண் தொலைபேசி எண்ணின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ உள்ள எண்களை வாங்கிப் பயன்படுத்துவதில் தனி ஆர்வம் இருக்கும். சிலர் அலுவலக பயன்பாட்டிற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக  தொடர்ச்சியான   எண்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அனைவரின் ஃபேன்சி எண் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிஎஸ்என்எல் பல்வேறு வகையான வேனிட்டி எண்களை வழங்குகிறது.

‘வேனிட்டி எண்கள்’ என்ற பெயரில் மின்  ஏலத்தின் மூலம் கவர்ச்சிகரமான எண்களை பிஎஸ்என்எல் விற்பனை செய்து வருகிறது. எவரும் தங்களுக்கு விருப்பமான ஆடம்பரமான மொபைல் எண்ணைப் பெற மின் ஏலத்தில் பங்கேற்கலாம். போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் வகைகளில் வேனிட்டி எண்கள் கிடைக்கின்றன.

Share This Article
Leave a review