- நடிகர் விஷால் பல ஆண்டுகளை கடந்து ஹீரோவாக பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் செயல்பட்டுவரும் விஷால், கடந்த ஆண்டில் மார்க் ஆண்டனி என்ற வெற்றி படத்தை எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து கொடுத்திருந்தார்.
நடிகர் விஷால் பல ஆண்டுகளை கடந்து ஹீரோவாக பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் செயல்பட்டுவரும் விஷால், கடந்த ஆண்டில் மார்க் ஆண்டனி என்ற வெற்றி படத்தை எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து கொடுத்திருந்தார்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர். இயக்குனர் நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக இவர் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகராக தமிழில் வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் சங்கத்திலும் பொதுச் செயலாளராக உள்ள இவர், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் அடுத்ததாக தனது இயக்கம் மற்றும் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை எடுக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் விஷால்.
40 ஆண்டுகளை கடந்த நிலையிலும் திருமணம் செய்யாமல் உள்ள விஷாலின் திருமணம்தான் எப்போதுமே கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக உள்ளது. ஆனாலும் தன்னுடைய திருமணம் குறித்து தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார் விஷால். முன்னதாக நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் இவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக பேசப்பட்டது. ஆனாலும் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று இவர்கள் கூறினர். தொடர்ந்து கோலிவுட்டின் பல விஷயங்களை பேசி வருகிறார் விஷால். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தவெக மாநாட்டில் அவர் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் தான் கலந்துக் கொள்வேன் என்று தற்போது கூறியுள்ளார்.
அரசியலில் தொடர்ந்து ஈடுபாடு காட்டிவரும் விஷால், நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ளநிலையில், விரைவில் தீவிர அரசியலிலும் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் லவ் ஃபெயிலியர் குறித்து பேசியுள்ள விஷால், ஒரு நபர் எந்தவிதமான என்ஜாய்மென்ட்டும் இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று 24 மணி நேரமும் தன் வேலையை பற்றி மட்டுமே நினைத்து வந்தால் அவருக்கு கண்டிப்பாக மருத்துவ உதவி தேவை என்று தெரிவித்துள்ளார்.
உடன் வேலை செய்யும் பெண்களை கூட ஏறிட்டு பார்க்காமல் ஒரு நபர் சமத்தாக இருந்தாலும் அவருக்கு மனதளவில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.அவருக்கு கண்டிப்பாக ஒரு லவ் பெயிலியர் இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
