விருதாச்சலம் அருகே முகுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அஜித் குமார். இன்ஜினியரிங் முடித்து இருந்த நிலையில் தனது உறவினரான ராமச்சந்திரனின் மகள் சங்கீதா. துரவலூர் கிராமத்தில் அரசு பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால் மாணவிக்கு திருமண வயதில் எட்டவில்லை என்பதை சுட்டி காட்டிய பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்த நிலையில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி காணப்பட்டனர்
தங்களது பெற்றோர் தங்கள் காதலை பிரித்து விடுவார்கள் என்று எண்ணி. வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து. விவசாயத்துக்காக வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திலே இருவரும் மயங்கி கிடந்துள்ளனர். இதை பார்த்த உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அஜித் குமார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துயரமான சம்பவத்தை அறிந்த மாணவியின் உறவினர்கள்
விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக விருதாச்சலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.