விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

1 Min Read

விருத்தாசலம் பூதாமூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி அமுதா தனது மகன் சக்திவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தியவாடி கிராமத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று திருப்பும் வழியில் கருவேப்பிலங்குறிச்சி- விருத்தாசலம் சாலையில் உள்ள வேடப்பர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது,
தங்களை யாரோ பின்தொடர்ந்து  மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் அமுதாவின் கழுத்தில் இருந்த  5 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதில் நிலை தடுமாறிய  அமுதா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.இதில் பலத்த காயமடைந்த அமுதாவை  சக்திவேல் அருகில் இருந்த  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

திருடுபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூபாய் ஒரு லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Share This Article
Leave a review