விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் அவரின் மகன் அறிவு என்ற அறிவழகன் இவர் ஒரு மனநலம் நோயாளிஆவார்.
சம்பவத்தன்று அறிவழகன் குப்பநத்தம் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்த ஒருவரின் செல்போனை பறித்ததாக கூறி நான்கு பேர் கொண்ட மர்மநபர்கள் அறிவழகனை கண்மூடிதனமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறிவழகனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
மேற்கொண்ட விசாரணையில் கோபால்,திருவரசன்,அமீர் பாஷா, செந்தமிழ்ச்செல்வன் ஆகிய நான்கு பேரு சேர்ந்து அறிவழகனை கடுமையாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து விருத்தாசலம் போலீசார் குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மகன் கோபால்,திருமூர்த்தி மகன் திருவரசன், செந்தில் மகன் செந்தமிழ்செல்வன், அலாவுதீன் மகன் அமீர் பாஷா ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.