மடியில் இருந்து பால் தானாக வந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஒரு சில்வர் பாத்திரத்தில் அந்த பாலை பிடித்துள்ளார்,அரை லிட்டர் அளவு பால் தானாகவே பசு மாட்டின் மடியில் இருந்து வந்துள்ளது,இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் நடைபெற்றதாக அவர் தெரிவிக்கிறார்
திடீர்,திடீர் என பல அதிசயங்கள் நடந்து வருகிறது தமிழ்நாட்டில். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே செங்கனாங் கொல்லை கிராமத்தை சேர்ந்த பாவாடை இவர் ஒரு விவசாயி இவர் தனது வீட்டில் பசு மாட்டு ஒன்று வளர்த்து வருகிறார், இந்த நிலையில் பாவாடையின் மனைவி வழக்கம் போல் இன்று காலை நேரத்தில் பசுமாட்டில் பால் கறக்க சென்று உள்ளார்,

அப்போது பசுமாட்டு மடியில் இருந்து பால் தானாக வந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஒரு சில்வர் பாத்திரத்தில் அந்த பாலை பிடித்துள்ளார்,அரை லிட்டர் அளவு பால் தானாகவே பசு மாட்டின் மடியில் இருந்து வந்துள்ளது,இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் நடைபெற்றதாக அவர் தெரிவிக்கிறார், இதை கேள்விப்பட்ட கிராம மக்கள் அந்த பசுமாட்டினை ஆர்வமுடனும் ஆச்சிரியத்துடன் பார்த்து செல்கின்றனர்,இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து கால்நடை மருத்துவர்களை கேட்ட போது இது சிறிய மாற்றம் தான் அதிசயம் எல்லாம் கிடையாது சிறிது நாட்களில் எல்லாம் சரியாகி விடும்.பால் சுரப்பு அதிகமானால் தானாக வடியும் என்கிறார்கள்.