கழிவு நீர் அகற்றும் பணியில் விதிமுறை மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை.

2 Min Read
ஷ்ரவன் குமார் ஜடாவத்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் அகற்றும் பணி நடைபெறும் போது சட்டத்தை மீறி பலர் செயல்பட்டு வருகின்றனர் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் போது அரசின் மீது பொதுமக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது எனவே அவற்றையெல்லாம் போக்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத்ஒரு உத்தரவினை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -
Ad imageAd image

சட்டத்தை மீறி செயல்படுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது ரூபாய் 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். என்று அவர் அந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கழிவுநீர் சுத்தம் செய்வது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான நகராட்சிகள், மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுடான ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய பணியாளர்களை அனுமதிக்க கூடாது. உரிய கவசம் அணிந்திருக்க வேண்டும். மேற்படி சட்டத்தை மீறி செயல்படுவோருக்கு முதன்முறையாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூபாய் 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டாவது முறையாக மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிய பாதுகாப்பு இல்லாமல் கழிவுநீர் அகற்றும் பணியில் உயிரிழப்பு ஏற்படுமாயின் இப்பணியில் ஈடுபடுத்திய உரிமையாளரோ அல்லது பணி அமர்த்திய நபரோ ரூபாய் 15 லட்சம் இழப்பீடாக வாரிசுதாரர்களுக்கு வழங்க வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் ஆறு தனிப்படை பாதுகாப்பு உபகரணங்களான பிரதிபலிப்பு ஆடை, பாதுகாப்பு கண் கண்ணாடி,  பாதுகாப்பு கையுறை, தலை பட்டை எப்போதும் இருப்பதையும் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறுவோருக்கு முதன்முறையாக 25000 இரண்டாவது முறையாக மீறுவோருக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்படும். கழிவுநீர் வாகனங்களின் சேவைக்கான தேசிய உதவி சேவையின் 1 4 4 2 0 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பதிவு செய்து உரிமம் பெற்ற வாகனத்தினரை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெறப்படும் கழிவுநீரை நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எனவும் ஆட்சியர்ஷ்ரவன் குமார் ஜடாவத் அறிவித்துள்ளார்.

Share This Article
Leave a review