தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் கருத்தடை சட்டம் 2023 ன் படி தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும்.இது தான் சட்டம்.காஞ்சிபுரத்தில் இதற்கான ஒப்பந்தம் குளோபல் பௌன்டேஷன் என்ற NGO விற்கு காஞ்சிபுரம் நகராட்சி கமிஷனர் கண்ணன் அவர்களால் சமீபத்தில் வழங்கப்பட்டது.
அதன்படி காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களை இரும்பு கொக்கியை வைத்து பிடித்து திருக்காலிமேடு பகுதியில் உள்ள வசதியற்ற கிடங்கில் போடப்பட்டுள்ளது . நாய்கள் பிடிக்கப்பட்டு ஒரு வார காலமாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அடைக்கப்பட்டிருந்ததை கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் அங்குள்ள நாய்களின் நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்படி காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களை இரும்பு கொக்கியை வைத்து பிடித்து திருக்காலிமேடு பகுதியில் உள்ள வசதியற்ற கிடங்கில் போடப்பட்டுள்ளது .நாய்கள் பிடிக்கப்பட்டு ஒரு வார காலமாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அடைக்கப்பட்டிருந்ததை கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் அங்குள்ள நாய்களின் நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் நாய்கள் கொத்து கொத்தாக மலம், சிறுநீர் மற்றும் இரத்தக் கறைகளின் மேல் கவலைக்கிடமான நிலையில் அடைக்கப்பட்டிருப்பதை நேரில் கண்டனர். இது குறித்து அங்கிருந்த குளோபல் பௌன்டேஷன் நிர்வாகி ஆனந்த் அவரை கேட்டபோது, கால்நடை மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் கருத்தடை ஏதும் செய்யாமல் அப்படியே வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
கீழ்க்கண்ட விதிமீறல்கள் நடந்துள்ளதாக சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கருத்தடை சட்டத்தின் படி தெரு நாய்களை வலை கொண்டு பிடிக்க வேண்டும் . ஆனால் இவர்கள் சுருக்கு கயிறு மூலம் கொடூரமாக பிடிக்கின்றனர். பிடித்த நாய்களுக்கு டோக்கன் கட்டி பதிவேட்டில் பிடித்த இடம், நாள் மற்றும் பாலினம் போன்றவற்றை உடனடியாக பதிவிட வேண்டும். ஆனால் இவை எதுவும் கடைப்பிடிக்க படவில்லை.
ஓரிடத்தில் பிடிக்கப்பட்ட நாய்களை வேறோரு இடத்தில் இடமாற்றம் செய்து விடுகின்றனர்.இதன்மூலம் அந்த நாய்கள் மற்ற நாய்களால் துரத்தப்பட்டு மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி அங்குள்ள மனிதர்களை கடிக்கின்றன. கருத்தடை சட்டத்தின் படி ABC மானிட்டரிங் கமிட்டி அமைத்து கருத்தடை செய்வதற்கு சுகாதாரமான அறைகள் அமைக்கப்பட்ட பிறகே நாய்களை பிடிக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் செய்யாமலே நாய்களை பிடித்து அடைத்து வைத்து துன்புறுத்துகிறார்கள்.
இந்த விதிமீறல்கள் யாவும் மாநகராட்சி கமிஷனர் கண்ணன் அவர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளார் என கூறப்படுகிறது. நாய்களை பிடிக்க மிகக் கடுமையான வழிமுறைகளை கையாளும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாயில்லா ஜீவன்களான நாய்களை துன்புறுத்தாமல் லாவகமாக பிடித்து கருத்தடை செய்து சுகாதாரமான முறையில் பேணிக் காக்க வேண்டும், உணவு அளிக்க வேண்டும் . இதற்காக பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அது எங்கே யாருக்கு செல்கின்றது என தெரியவில்லை. இதுவும் விதிமீறல் தான் என கூறுகின்றனர்.
வாயில்லாத , நன்றியுள்ள ஜீவனை பேணிக்காக்கும் ப்ளூ கிராஸ் என்ற அமைப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இல்லையோ என சந்தேகம் பல ஆண்டுகளாக மக்கள் மனதில் நிலவி வருகிறது என ஆதங்கத்துடன் சமூக ஆர்வலர்கள் புலம்பித் தள்ளினார்கள்.
இது குறித்து, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கருத்தடையை தவறாக செய்வதாலேயே தெரு நாய்களின் எண்ணிக்கை குறைவதே இல்லை எனவும் கூறுகின்றனர்.
இந்த அனைத்து விதிமீறல்களையும் உடனே களைந்து நன்றியுள்ள வாயில்லா ஜீவனை துன்புதம் என்ஜியோக்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகின்றனர்.