ஏலச்சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டார் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்..

2 Min Read
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்..

வானூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்..

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீநாதா அவர்களிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த புகார் மனுவில் தங்கள் கிராமத்தை சேர்த்த நபர் மாதாந்திர ஏல சீட்டு நடத்திவந்தாகவும்,அதில் தைலாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏல சீட்டு நடத்திவந்த நபரிடம் அனைவரும் சேர்ந்து மாதம் தவறாமல் பணம் செலுத்தி வந்ததாகவும், ஏல சீட்டுடில் சேர்ந்த பொதுமக்கள் 38 மாதங்கள் வரை தவறாமல் பணம் செலுத்தியுள்ளதாகவும் . தங்களின் சீட்டு தவணை காலம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் .

ஏலச்சீட்டு நடத்தி வந்த அந்த நபர் தங்களுக்கு சேர வேண்டிய சீட்டு தவணை பணத்தை பல மாதங்கள் ஆகியும் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் .அவரிடம் பலமுறை சென்று சீட்டு தவணை பணத்தை தரும்படி வலியுறுத்தி வந்தநிலையில்.

மேலும் தங்கள் பகுதியில் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம்  சீட்டு பணம் வசூலித்துள்ளார். தங்களின் பணம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அவரிடம் உள்ளது.

கடந்த 19ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்ற அந்த நபர்  தற்போது வரை சொந்த ஊருக்கு திரும்பி வரவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அதுவும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர் தைலாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள்.

சுற்றியிருக்கும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை கடன் பெற்று அந்த தொகையையும் உரியவர்களுக்கு திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.இந்த நபர். எனவே தலைமறைவாக இருக்கும் அவரை கண்டுபிடித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தங்களுக்கு சேர வேண்டிய சீட்டு தவணை பணத்தை அவரிடம் இருந்து மீட்டு  தர ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த புகார்  மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததனர்.

பாதிக்கப்பட்டவர்களின் புகாரை ஏற்றுக்கொண்ட எஸ்.பி. ஸ்ரீநாதா இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து  உரிய நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் உறுதியளித்தார் .

Share This Article
Leave a review