நண்பர் நினைவு நாளில் பிரியாணி பரிமாறி அசத்திய விழுப்புரம் சவுத் காலனி இளைஞர்கள் .

0
33
விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி இளைஞர்கள்

நண்பரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சாலை ஓரங்களில் பசியால் வாடிய 250 பேருக்கு பிரியாணி பரிமாறிய விழுப்புரம் சவுத் காலனி இளைஞர்கள்களின் செயல் , விழுப்புரம் பகுதியில் பேசும் பொருளாக உள்ளது .

விழுப்புரம் தெற்கு ரயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சவுக்கத் அலி ரயில்வே ஊழியர் இவர் மறைவுக்கு பின்னர் , அவரது ஒரே மகனான சுஜாத் அலிகானுக்கு அவரது தந்தையின் வேலை வழங்கப்பட்டது .

மறைந்த சுஜாத் அலிகான்

திருமணம் ஆகாத நிலையில் தனது உறவினர்கள் நண்பர்களுடன் தெற்கு ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த சுஜாத் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 26 ம் தேதி துரதிஷ்டவசமாக விபத்து ஒன்றில் உயிர் இழந்தார் .

அவரது முதலாம் நினைவு நாளான இன்று , அவரது நண்பர்கள் சுஜாத் அலியின் நினைவை போற்றும் வகையில் தெற்கு ரயில்வே காலனி குடியிருப்பு நுழைவாயிலில் அவருக்கு மலர்களால் அலங்காரகிக்கப்பட்ட மேடைகள் அமைத்து மலர் தூவி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் .

ஏழைமக்களுக்கு பிரியாணி பரிமாறிய இளைஞர்கள்

மேலும் சாலையோரங்களில் பசியால் அவதிப்படும் ஏழை எளிய மக்கள் 250 நபர்களுக்கு பசியாற சிக்கன் பிரியாணி பரிமாறி இறந்த அவர்களது நண்பர் சுஜாத் அலியின் நினைவு நாளை அனுசரித்தனர் .

விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி இளைஞர்களின் இந்த செயல் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் பயணித்த பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் பேசும் பொருளாக இருந்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here