விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல்

2 Min Read
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி

2024- ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக 13. விழுப்புரம் (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கு (வெள்ளிக்கிழமை) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,44,350 பெண் வாக்காளர்கள் 7,58,545 மற்றும் இதர வாக்காளர்கள் 220 உட்பட ஆக கூடுதல் 15,03,115 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு 1732 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். மேற்படி வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள்

மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் எளிதாக சென்று வாக்களிக்க வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள பகுதிகளில் சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தக்குடிமக்கள் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல ஏதுவாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு அரசு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள SAKSHAM APP, 1950 உதவி மையம் மற்றும் தேர்தல் கட்டுப்பட்டு அறை மூலம் வேண்டுகோள் விடுக்கும் மாற்றுத்திறனாளி மற்றும் முத்தக் குடிமக்கள் வாக்காளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவை அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக உதவி மையங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1732 வாக்குச்சாவடி மையங்களில் 90 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேற்கண்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஏதுவாக நுண் பார்வையாளர்கள் மற்றும் மத்திய ஆயுத போலிஸ் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்கும் பொருட்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட மொத்தம் 1185.

எஸ்.பி தீபக் சிவாச்

வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிபுரிய வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்-1, வாக்குச்சாவடி அலுவலர்-2 மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்-3 உள்ளிட்ட பணிகளுக்கு 8316 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், வெளி மாநிலங்களிலிருந்து வரப்பெற்ற காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையினர் உள்ளிட்ட 3081 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட பணம், ரூ.96,20,161/-, ரூ.39,22,473/- மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.36,100/- மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் ரூ.4,79,385/- மதிப்புள்ள இதரப் பொருட்கள் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 19.04.2024 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர்

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து வாக்காளர்களும் 100% வாக்களிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்

Share This Article
Leave a review