கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுவன், கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி, ஆசைவார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இதுகுறித்து வெளியில் யாரிடம் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அச்சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்தது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாணவி வயிறு வலிப்பதாக கூறியதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் , விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் விசாரணையில், அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுவன் இந்த குற்றசெயலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து மாணவியின் வாக்குமூலத்தின் பேரில் 12-ம் வகுப்பு மாணவனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.