மரக்காணம் கள்ளச்சாராய சாவு சம்பவத்திற்கு பிறகு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து போலீசார் கள்ளச்சாராய தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டு தடுத்து காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர. விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மற்றும் குரல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் பல நாட்களாக அந்த பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் கொரலூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த மச்சக்காந்தி என்ற பெண் தொடர்ந்து அந்த பகுதியில் கள்ளச்சாராயம் விட்டு வருவது தெரியவந்தது அதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டு அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மச்சக்காந்தி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பழனி அவர்களின் ஆனைக்கினங்க தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்