விழுப்புரம் மாவட்டத்தில் திருநங்கைகள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றம்

2 Min Read
ஆட்சியர் பழனி மற்றும் திருநங்கைகள்

விழுப்புரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் தெரிவித்தாவது தமிழ்நாடு முதல்வர் திருநங்கைகள் சமூகத்தின் பாதுகாப்பினை உறுதி செய்திடுவோம். சுயமாகவும், சுதந்திரமாகவும், செயல்படும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

அதன் அடிப்படையில் திருநங்கைகளுக்கான மாதந்தோர ஓய்வூதியத்தினை ரூபாய்1000 இருந்து ரூபாய் 1500 ஆக உயர்த்தி வழங்கி திருநங்கைகளின் வாழ்வாதாரத்தினை காத்து வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் 212 திருநங்கைகள் தற்போது வசித்து வருகின்றன. 2021- 22 ஆண்டில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மர்லிமா என்ற திருநங்கைக்கு 25 ஆண்டு சேவையை பாராட்டி தமிழ்நாடு முதல்வரால் ரூபாய் 1 லட்சம் பரிசு தொகை பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் பழனி

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 45 திருநங்கைகளுக்கு தலா ரூபாய் 50,000 சுய தொழில் மானியமும் தலா ₹4000 வீதம் 118 திருநங்கைகளுக்கு ரூபாய் 4,72,000 மதிப்பில் கொரோனா நிவாரண நிதியுதையும் 210 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளன. குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகளின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி, மாதாந்திர ஓய்வு தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, பசுமை வீடு, போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஆகும். எனவே திருநங்கைகள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடி தீர்வின் மூலம் தீர்வு காணப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றுப்பட வேண்டும் என்று கூறினார்.

ஆட்சியர் பழனி மற்றும் திருநங்கை

தொடர்ந்து ஐயன் கோயில் பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள திருநங்கைகள் குடியிருப்பு பகுதியிணை பார்வையிட்ட ஆட்சியர் அவர்களுடன் கலந்துரையாடிய போது, இப்பகுதியில் மதில் சுவர், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, நாள்தோறும் குடிநீர் வசதி, குடியிருப்புகளுக்கு மின்சார வசதி, சிட்டா, உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக துறை சார்ந்த அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டவுடன் திருநங்கைகளுடன் தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுக்கப்படும். தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூக நலஆர்வலர் ராஜம்மாள், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னம்பலம், பிடிஓ ஜானகி, திருநங்கைகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review