விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் பொதுமக்களின் புகாரினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் வந்து வழங்கலாம். அப்படி வழங்கப்படும் புகாரின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பினை வெளியிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் தொடர்ந்து பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று வாராந்திர சிறப்பு மனு விசாரணை நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சசாங் சாய் , அவர்களின் உத்தரவின் பேரில்.
விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி மற்றும் கோட்டகுப்பம் ஆகிய நான்கு உட்கோட்டங்களில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இன்று சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் இன்று மட்டும் 182 புகார் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டனர். அதில் 146 புகார் மனுக்களின் மீது விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடத்தும் இது போன்ற முகாம்கள் பொதுமக்கள் காவல்துறை இடையே உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. மேலும் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் புகார் அளிக்க வருவதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. புகார் அளித்து பல நாட்கள், பல வாரங்கள், பல ஆண்டுகள் கடந்தும் கூட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையை மாற்றி உடனடி தீர்வாக விசாரணை மேற்கொள்ளப்படுவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.